வெள்ளைவான் கடத்தல்; தஸநாயக்க உள்ளிட்ட ஐவருக்கு 6 மாதங்களின் பிறகு பிணை

தமிழ் இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில் கடந்த 6 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 6 மாதங்களாக பிணை கோரிக்கையை நிராகரித்துவந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, சந்தேகநபர்களுக்கான பிணை அனுமதியை வழங்கியுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.


இவர்களது உடல் எச்சங்கள் எனக்கூறுகின்ற சில எலும்புகளும் திருகோணமலை பகுதியிலுள்ள கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாமில் இருந்ததாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.


இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியதோடு ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 


குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைகளில் பல அதிர்சித் தகவல்கள் தெரியவந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க நீதிமன்றின் அனுமதியுடன் கடந்த ஜுலை 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.


நீதிமன்றத்தின் உத்தரவுக்கு 6 மாதங்களாக தொடர்ந்தும் இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுவந்தது.


இதனை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இந்த நிலையில் சந்தேக நபர்களின் மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மனிலால் வைத்தியலங்கார முன்னிலையில் இடம்பெற்றது.


இதன்படி தலா ஒருஇலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், வெளிநாடு செல்வதற்கான இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்தார்.


அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்து கையெழுத்து இடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


கடத்தப்பட்டு கொழும்பு துறைமுக வளாகத்திலிருந்த ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவின் சித்திரவதைக் கூடத்திலும் திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்த கோட்டா முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேரும் தொடர்ந்தும் உயிருடனேயே இருப்பதாக அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018