‘துப்பாக்கி முனை’யில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா, ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. தற்போது இவர் பிரபுதேவா ஜோடியாக ‘குலேபகாவலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக நடிகை ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை ஹன்சிகா. இந்தப் படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கவுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018