சந்திரிக்காவின் காதல் எப்படியானது என்று விளக்கிய மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வேறு நாட்டை சேர்ந்தவர்களை காதலிப்பதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக நாட்டை காட்டி கொடுக்கவே முயற்சிக்கின்றார் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் வீட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது கருத்துரைத்த அவர்,

மொராகாஹகந்த பல்நோக்கு திட்டமானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி மகாவலி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ருவன்வெலிசாய துட்டகைமுனு மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் நிறைவு செய்ய முடியாமல் போனமைக்கு பின்னர் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. ராஜபக்ஷ வம்சத்தினர் கள்வர்கள் இல்லை, அவர்களிடம் காணப்பட்டதை விற்பனை செய்தே அரசியல் செய்தார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் போனமைக்கு ராஜபக்ஷ பரம்பரையுடன் தனக்கு எந்தவித கோபமும் இல்லை.

இன்று சுதந்திரமாக சென்று வருவதற்கான சூழல் காணப்படுகின்றது. அவருக்கு அதிக புண்ணியங்கள் சேரட்டும். எனக்கு தேர்தலில் களமிறங்க முடியாமல் போனமைக்கான காரணம் பற்றி சொல்ல வேண்டுமானால், அதற்குரிய காரணகர்த்தா சந்திரிக்கா அம்மையார்தான்.

அவர் தற்பொழுது நல்லிணக்கம் தொடர்பில் கதைத்துக்கொண்டு தடுமாறுகின்றார். சந்திரிக்கா வேறு நாட்டை சேர்ந்தவர்களை காதல்’ பண்ணுவதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக நாட்டை காட்டி கொடுக்கவே முயற்சிக்கின்றார் என்றார்.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018