வடகொரியா - தென் கொரியா இடையிலான ஒப்பந்தம்: ஐ.நா. சபை பொது செயலாளர் பாராட்டு

வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

வடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றன. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, தென்கொரியாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தென்கொரியாவுடன் பேசுவதற்கு வசதியாக ‘ஹாட்லைன்’ தொலைபேசி (நேரடி தொலைபேசி) வசதியை தொடங்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் ஹாட்லைன் தொலைபேசி மீண்டும் துவக்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை தணிக்க உதவும். இது அமைதி திரும்புவதற்கான முதல் படியாகவே பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018