உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் நினைவுதினம் அனுஷ்டிப்பு


கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில், ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் நினைவுதினம் அனுஷ்டிப்பு


உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த விடாமல், அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.


இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இந்தச் சம்பவம் இடம்பெற்று 44 ஆண்டுகள் கடந்துள்ள போதும், இன்னும் அது தொடர்பில் எவ்வித நியாயமும் கிடைக்காமல் உள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019