லசந்தவின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைப்பு
படுகொலைசெய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது.
பொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரது குடும்ப உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும், மனித உரிமைகள் அமைப்பினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
“லசந்த விக்கிரமதுங்க படுகொலைசெய்யப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை” என்று மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய தினமும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக குற்றவாளிகளுக்கு அரசு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.