வடக்கில் போதைப்­பொ­ருள் பாவ­னை­யை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுங்கள்!

வடக்கு மாகா­ணத்­தில் அதி­க­ரித்­து­வ­ரும் போதைப்­பொ­ருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் என்ற வகை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலிஸ் மூத்த அதி­கா­ரி­களை அழைத்து கலந்­து­ரை­யாடி சிறப்புச் செய­ல­ணியை மேற்­கொள்ள வேண்­டும் என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

வடக்கு மாகாண சபை­யின் 115ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வி­லேயே அவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலு­ம் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில் அதி­லும் குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக போதைப்­பொ­ருள்­கள் அதி­க­ள­வில் மீட்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் கார­ண­மாக நாம் இவ்­வ­ளவு கால­மும் போதைப்­பொ­ருள் கடத்­தல் மைய­மாக வடக்கு மாகா­ணம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என நினைத்து வந்­தோம். ஆனால் அந்த நிலை­மாறி இப்­போது எமது மாகா­ணத்­தின் இளைய சமு­தா­யம் போதைப்­பொ­ரு­ளுக்கு வெகு­வாக அடி­மை­யாகி வரு­கின்­றது.

வடக்­கில் உள்ள பாட­சா­லை­களை குறி­வைத்து நன்கு திட்­ட­மிட்­ட­வ­கை­யில் போதைப்­பொ­ருள் பாவ­னையை பரப்­பும் நட­வ­டிக்கை திரை­ம­றை­வில் இடம்­பெ­று­கின்­றது. எமது பிர­தே­சங்­க­ளில் போதைப் பொருள்­களை விற்­பனை செய்­ப­வர்­களை இது­வரை பொலி­ஸார் ஒரு­த­டவை கூடக் கைதுசெய்­ய­வில்லை. மாறாக போதை ப்­பொ­ருளை வாங்­கிப் பாவிக்­கும் ஒரு சில நபர்­களை மட்­டுமே கைது செய்­கின்­ற­னர். அவ்­வாறு கைது செய்­தா­லும் கைது செய்த நபர்­களை ஒன்று இரண்டு நாள்­க­ளில் விடு­தலை செய்து விடு­கின்­ற­னர்.

எனவே திட்­ட­மிட்ட வகை­யில் எமது இளைய சமு­தா­யத்தை போதைப்­பொ­ரு­ளால் அழிக்­கும் செயலை கட்­டுப்­ப­டுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். நாம் அர­சி­யல் தீர்­வுக்­காக போரா­டி­வ­ரு­கின்­றோம். எமது இளைய சமூ­கத்­தி­னர் நாட்­டில் சமா­தா­னம், ஒழுக்­கம் மற்­றும் நல்­லி­ணக்­கத்­து­டன் வாழ போராடி வரு­கின்­றோம். ஆனால் எமது இளைய சமு­தா­யம் போதைப்­பொ­ருள்­க­ளுக்கு அடி­மை­யாகி வேறு ஒரு பாதை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. எனவே அதி­லி­ருந்து மீட்க உரிய நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டும்–என்­றார்.

‘‘தற்­போ­தைய அரசு போதையை ஒழிக்­கின்­றோம் என்று கூறிக் கொண்டு இந்­த­முறை வரவு செல­வுத் திட்­டத்­தில் பியர் வகை­க­ளுக்­கான விலை­யைக் குறைத்­துள் ளது. இதன் ஊடாக மது பாவ­னை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இதனை தடுக்க உட­ன­டி­யாக சட்ட ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சுகிர்­தன் தனது கருத்தை முன்­வைத்­தார்

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018