மாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கு சொந்தமான, எம்.எச். 370 பயணிகள் விமானம், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8ல், திடீரென மாயமானது. அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனத் தலைவர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற போது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.

அதில் பயணம் செய்த இந்தியர்கள் உட்பட, 239 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு வருகிறது. விமானத்தை தேடும் பணியில், மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, உள்ளிட்ட, 14 நாடுகளைச் சேர்ந்த, 58 விமானங்களும், 43 கப்பல்களும் ஈடுபட்டன.எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் மலேசிய அரசு விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நேற்று மலேசியாவின் புட்ராஜ்யாவில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய உள்நாட்டு விமான போக்கவரத்து துறை இயக்குனர் ஜெனரல் அசாருதீன் அப்துல் ரஹ்மான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசியான் இன்பினிட்டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஓசியான் இன்பினிட்டி நிறுவனம் தனது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல் மூலம் முதல்கட்டமாக இந்திய பெருங்கடலில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவில் வரும் 17-ம் தேதி விமானத்தை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018