இந்திய பல்கலைகழகங்களில் பட்டபடிப்பை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கான காலஎல்லை எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவு

லங்கை மாணவர்களுக்கு இந்திய பல்கலைகழகங்களில் பட்டபடிப்பை மேற்கொள்ள எதிர்வரும் 15ஆம் திகதி வரை புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படவுள்ளன.

இந்திய அரசாங்கம் அந்நாட்டிலுள்ள பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 175 இலங்கை மாணவர்களுக்கு புலமைபரிசில்களை வழங்கவுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk  என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

 

2018 – 2019 கல்வி ஆண்டுக்காக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களால் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழங்கங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்ளமுடியும்.

 

இலங்கை இந்திய கலாச்சார நட்புறவு பேரவையின் கீழான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்படவுள்ளன.உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுடன் இணைந்து இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு புலமைப் புரிசில்களை வழங்குகின்றது.

 

மருத்துவ கற்கை நெறி தவிர்ந்த விஞ்ஞானம் , பொறியியல் , வர்த்தகம் , பொருளாதாரம் ,வணிகம் ,மனிதநேயம் ,கலை , கர்நாடகசங்கீதம் ,பரதநாட்டியம் , காட்சி கலைகள் ஆகிய கற்கைநெறிகளுக்காக நேரு ஞாபகார்த்த புலமைபரிசில் திட்டத்தின் கீழ் 100 புலமை பரிசில் வழங்கப்படவுள்ளன.

 

மருத்துவ கற்கை நெறி தவிர்ந்த விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், பொருளாதாரம், வணிகம் மனிதநேயம் மற்றும் கலை ஆகிய துறைகளில் முதுகலைப்பட்ட படிப்பை தொடர்வதற்காக மௌலானா அஸாட் புலமைபரிசில் திட்டத்தின் கீழ் 50 பேருக்கு புலமைபரிசில் வழங்கப்படவுள்ளன.

 

ரஜீவ் காந்தி புலமை பரிசில் திட்டத்தின் கீழ் தகவல் தொழிநுட்பம் பிஈ பிடெக் [IT/ B.E/ B.Tech] ஆகிய துறைகளில் இளம்கலை கற்கை நெறியை தொடர்வதற்காக 25 மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கப்படவுள்ளன.

 

புலமைப்பரிசிலை பெறும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கான கட்டணம் ,மாதாந்த கொடுப்பனவு ,வருடாந்த நூல்கள் மற்றும் காகிதாதிகளுக்கான செலவுகளும் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018