தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் திறப்பு! Posted By Aruna உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தையல் இயந்திர சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகமானது, மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில், நேற்று (10.01.2018) திறந்துவைக்கப்பட்டது.


தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் திறப்பு!


மாநகரசபையின் மேயர் வேட்பாளர் எஸ்.வசந்தக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்புவிழாவிற்கு, கட்சியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் செயலாளர் வ.கமலதாஸ் மற்றும் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்களாக பலரும் கலந்துகொண்டனர்.


பின்னர் கருத்துத் தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தத் தேர்தலானது மிகவும் சாதகமானதாக அமைகின்றது. காரணம் செலவுகள் குறைந்ததாகவும் பிரசாரங்கள் கிராம மட்டங்களில் செயற்படுத்த கூடுதலானதாகவும் இருக்கின்றது. அந்தவகையில் கடந்த கிழமைகளில், வாகரை பிரதேச சபைக்குட்பட்ட பிரிவுகளில் எமது வேட்பாளர்களுடன் இணைந்து, வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில், நகர்புறத்தை அண்டிய பகுதிகளில், பிரச்சாரத்தில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சாரங்கள் இம்முறை தேர்தல் சட்ட மூலங்களுக்கு அமைவாக, பல சட்ட திட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு எமது நகர்வுகளை நகர்த்த வேண்டும் என கருத்துத் தெரிவித்தார்.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018