புதிய ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆயுர்வேத வைத்தியர்கள் 640 பேருக்கு தலைமைத்துவம் அபிவிருத்தி தொடர்பான பயிற்சி திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தலைமைத்துவம் மற்றும் நடைமுறை பயிற்சியின் ஊடாக தலைமைத்துவ திறமை மற்றும் 'நற்சிந்தனை' எனும் தொனிப்பொருளின் கீழ் ஆறு நாட்களை கொண்டதாக இந்த நிகழ்ச்சி திட்டம் இராணுவ பயிற்சி பாடசாலைகளில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமானது. இந்த பயிற்சி திட்டம் நாளை வரை இடம்பெறவுள்ளது.


இனத்தை கட்டியெழுப்பும் பொறுப்புடன் இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ பயிற்சி நிலையங்களான தியதலாவ, கலத்தேவ, மின்னேரிய, எம்பிலிபிடிய மற்றும் பூவெலிகட முகாம்களில் நடைபெறுகின்றன.

 

இந்த பயிற்சியில் தலைமைத்துவம், குண தர்மங்கள், பயிற்சியின் மூலம் முன்னேற்றம், வாழ்க்கையில் சவால்களை வெற்றியிடுவது தொடர்பாகவும், தவறான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பான கருத்துகள் அறிவூட்டப்படுகின்றது.

 

சுகதார, போசனம் மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மூலம் வடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இந்த பயிற்சி நெறி தொடர்பாக இராணுவ பயிற்சி பணிப்பாளரருக்கு பணிப்புரை விடுத்தார். இதன் பிரகாரம் இராணுவ பயிற்சி முகங்களான தியதலாவ தொண்டர் பயிற்சி பாடசாலை, மின்னேரிய காலாட் படை நிலையம், அம்பாறை, தியதலாவை துப்பாக்கி சூட்டு பயிற்சி நிலையம், கலாஓயா, கலத்தேவ, பனாகொட, மின்னேரிய, அம்பிலிபிடிய பயிற்சி, பூவெலிகட, அம்பேபுஸ்ஸ தொம்பகொட , குட்டிகல, புத்தளம், தெகிஅத்தகண்டிய மற்றும் ரண்டெம்ப பயிற்சி பாடசாலைகளில் இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.

 

இந்த பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்விற்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு சமுர்த்தி அதிகாரிகளுக்கு இராணுவத்தினரால் இந்த பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018