கச்சத்தீவு திருவிழாவில் தடைகளை மீறி பங்கேற்போம் - சின்னத்தம்பி

தடைகளை மீறி கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போம் என தமிழக மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.


கச்சத்தீவு திருவிழாவில்  தடைகளை மீறி பங்கேற்போம் - சின்னத்தம்பி


மத நல்லிணக்க விழாவாக நடைபெறும் கச்சத்தீவு திருவிழா இருநாட்டு மக்களின் உறவு சார்ந்த விழாவாக அமையும் எனவும் தமிழக மீனவர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையில்  நீண்ட காலமாக  தொழில் ரீதியான முரண்பாடுகள் நீடித்து வரும் நிலையிலும் இரு தரப்பையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா வருடாந்தம்  இடம்பெற்று வருகின்றது.


இதற்கமைய  எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில்  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது.


இந்த விழாவிற்கு இலங்கையிலுள்ள யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர், இராமேஸ்வரம் வேர்கோடு பங்கு தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த வேர்கோடு பங்குதந்தை அந்தோணிசாமி, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு தமிழகத்திலிருந்து செல்ல அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படைவசதிகள் தொடர்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசணை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில், யுத்தம் இடம்பெற்ற போதும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டதாக தெரிவித்த அகில இந்திய பாராம்பரிய மீனவர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி, கடந்த முறை பிரிட்ஜோ எனும் தமிழக  மீனவர் ஸ்ரீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்தமையால் திருவிழாவை புறக்கணித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


 எனினும், இந்த முறை வியாபார நோக்கத்துடன் தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்வதாக தெரிவித்து தமக்கான அனுமதி  மறுக்கப்பட்டாலும், தடையை மீறி நாட்டுப் படகுகளில் திருவிழாவிற்கு செல்வோம் என சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018