ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஆராய பிரதம நீதியரசர் தலைமையில் நீதியரசர்கள் குழு

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தனது பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடகாலத்திற்ககு நீடிக்க முடியுமா என்பதை ஆராய பிரதம நீதியரசர் 5 நீதிபதிகளை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த குழுவுக்கு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் உயர் நிதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களான ஈவா வனசுந்தர , பூவநேக அலுவிஹார , கே.ரி.சித்திரசிறி மற்றும் சிசிர டி அம்றூ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அரசியல் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பாக உயர் நிதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

 

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைவாக இந்த சத்தியப்பிரமானம் இடம்பெற்றது. இதற்கமைவாக ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாகும்.

 

இருப்பினும் அரசியல் யாப்பின் 19 வது திருத்தம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்தின் படி ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 5 வருடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதனால் ஜனாதிபதி தனது பதவிக்காலம் 5 வருடங்களை கொண்டதா அல்லது 6 வருடங்களை கொண்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் ஆலோசனை பெற்றுகொள்வதற்காகவே ஜனாதிபதி கடிதம் ஒன்று எழுதினார். இதனை கவனத்தில் கொண்டே உயர் நீதிமன்றம் ஆராய்வதற்காக நீதியரசர்கள் குழுவொன்றை அமைத்துள்ளது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018