நேரடிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்: தென் கொரிய ஜனாதிபதி

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தான் தயாராக உள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.


தென் கொரியாவில் நேற்று புதன்கிழமை தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி பகிரங்கமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.


கடந்த செவ்வாய்க்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில், தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்ப வட கொரியா இணக்கம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கு மேற்படி அழைப்பை தென் கொரிய ஜனாதிபதி விடுத்துள்ளார்.


இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்......

இது இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவின் ஆரம்பம் ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து நட்புறவு ஏற்படுவதற்கான முதல் கட்டம் இதுவாகும். வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக இருக்கும்.வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அந்த விவகாரத்தில் எங்களுக்கு அமெரிக்காவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. அத்துடன் இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு கொரியாக்களுக்கும் இடையே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019