தென்பிராந்திய கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினர்

தென் பிராந்திய கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன் மீன்பிடிப் படகொன்று மோதியுள்ளது. 

நேற்று முன்தினம் இவ்வாறு விபத்துகுள்ளான மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர்.


ஏழு மீனவர்களுடன் ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இம்மாதம் முதலாம் திகதி புறப்பட்டுச்சென்ற 'நதீஷா ஐஐ' என்ற மீன்பிடிப்படகு, ; கொழும்பு துறைமுகத்திலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்துகொண்டிருந்த 'எம்வி க்லோவிஸ் கேப்டன்' எனும் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பலுடன் மோதி விபத்துகுள்ளகியுள்ளது.

 

தெய்வேந்திர முனை கடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதற்காக கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மீனவர்களில் இருவர் கப்பலின் சிப்பாய்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

 

மேலும் இலங்கை கடற்படையினரின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைளின்போது மேலும் ஒருவரை காப்பாற்றப்பட்டுள்ளதுடன், பலியான இருவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர்கள் விரைவாக காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு கராபிட்டிய போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, சுகயீனம் காரணமாக மரணமடைந்த மீனவரின் பூதஉடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018