யுத்தகளமானது கன்னி பாராளுமன்ற அமர்வு. சிலருக்கு மர்ம ஸ்தானங்களிலும் தாக்குதல், பாதுகாப்பாக வெளியேறினார் சம்பந்தன்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான  ஜனாதிபதி  ஆணைக்குழுவின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படாததையடுத்து அரச  தரப்பான  ஐ.தே.க. வுக்கும் மகிந்த ஆதரவு பொது எதிரணிக்குமிடையே வெடித்த சர்ச்சை கைகலப்பாக மாறியதில் பல எம்.பி.க்கள் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.  

இக் கைகலப்புகளினால் சில எம்.பி.க்கள் காயமடைந்த  அதேவேளை இன்னும் சில எம்.பி.க்களின் ஆடைகளும் கிழித்தெறியப்பட்டன. தற்பாதுகாப்புத் தாக்குதல், பதுங்கித் தாக்குதல், அதிரடித் தாக்குதல்,  கொரில்லாத் தாக்குதல் என மோதல் பல வழிகளிலும் இடம்பெற்றதனால் சமார் 20 நிமிடங்கள் வரை பாராளுமன்றம் போர்க்களம் போல் காணப்பட்டது.

 மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு  விசேடமாகக் கூட்டப்பட்டது. எனினும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன் கூற்றை எதிர்க்கட்சிகளின் கடும்  எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்வைக்க முயன்றார். இதனையடுத்து  சபையில் மோதல் ஏற்பட்டது.

 #பதாகைகளுடன் சபைக்கு நடுவே இறங்கிய மகிந்த அணி ----- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகள், கூச்சல்கள், கோஷங்களுக்கு இடையே பிரதமர்  தன் கூற்றை முன்வைத்தார். இதனையடுத்து மகிந்த ஆதரவு  பொது எதிரணியைச் சேர்ந்த 29 எம்.பி.க்கள் கைகளில் அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு சபைக்கு நடுவே இறங்கினர்.  இதனையடுத்து படைக்கல சேவிதர்கள் செங்கோலையும் சபாநாயகரையும்பா துகாப்பதற்காக ஓடோடி வந்தனர். 

  #தாக்குதலைத்_தொடுத்த_ஐ.தே.க. எம்.பி.க்கள் 

 இதனையடுத்து திடீரென  அதிரடியாக சபைக்கு நடுவே இறங்கிய ஐ.தே.க. வின் பின் வரிசை எம்.பி.க்கள் மிகுந்த ஆவேசத்துடன் மகிந்த அணி  எம்.பி.க்கள் வைத்திருந்த பதாகைகளை பறித்து கிழித்து வீசினர்.  இதனால் இரு தரப்புக்குமிடையே தள்ளுமுள்ளு, இழுபறி ஏற்பட்ட நிலையில் ஐ.தே.க.  எம்.பி.க்கள் அதிரடித் தாக்குதலை தொடங்கினர். இதனால் சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது. மகிந்த அணியினரும் திரும்பித் தாக்கத் தொடங்கினர். எனினும் சில மூத்த எம்.பி.க்கள் இரு தரப்பு மோதலையும் ஒருவாறு தடுத்து சுமுக நிலையை ஏற்படுத்த முயன்றனர். 

 #கன்னத்தில்_அறை_வாங்கிய_மரிக்கார் 

 இதற்கிடையில் மிகவும் ஆவேசப்பட்ட நிலையில் காணப்பட்ட ஐ.தே.க.வின் எம்.பி.யான  மரிக்காரை பலரும் கட்டுப்படுத்த முயன்றபோதும்   அது முடியவில்லை. இந்நிலையில் அவர் மகிந்த அணி எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளு பட்டுக் கொண்டிருந்தபோது  மகிந்த ஆதரவு  அணியை சேர்ந்த மூத்த  அரசியல்வாதியான  காமினி லொக்குகே மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து  மரிக்கார் இன்னும் ஆவேசமாக  துள்ளிக் குதிக்கவே,  அவரை  சில ஐ.தே. க. எம்.பி.க்கள் இழுத்துச் சென்றுவிட்டனர்.

  #பிரதமரை_நோக்கி_புத்தக_வீச்சு 

 இதற்கிடையில் மகிந்த ஆதரவு அணிப்  பக்கத்திலிருந்த பிரதமரை நோக்கி புத்தக வீச்சு இடம்பெற்றது. ஆனால் பிரதமருக்கு பாதுகாப்பு  வழங்கிக் கொண்டிருந்த ஐ.தே.க. எம்.பி.க்கள் அதனை தடுத்துவிட்டனர். அத்துடன் பிரதமருக்கான பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தினர்.

  #மயங்கி_விழுந்த_இளம் எம்.பி. 

 ஐ.தே.க. தரப்பில்  இன்னொரு  எம்.பி.யான  முன்னாள் அமைச்சர்   ஜயலத் ஜயவர்த்தனவின் மகனான  கவிந்து ஜயவர்தனவும் பிரதமர் மீது புத்தகம் வீசப்ட்டது தொடர்பில் மகிந்த தரப்புடன் முரண்பட்டுக் கொண்டிருந்தார். அவரையும் சிலர் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.  எனினும் அவர் மகிந்த அணி எம்.பி.க்களான  கெஹலிய ரம்புக்வெல, மகிந்தானந்த ஆகியோருடன்  மிகவும் ஆவேசமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். 

 இந்நிலையில் உணர்ச்சி மேலீட்டால் அவர் திடீரென மயங்கி சபை நடுவே விழுந்து விட்டார்.  உடனடியாக அவரை  கெஹலிய, மகிந்தானந்த ஆகியோர் தூக்கி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரை ஐ.தே.க. எம்.பி.க்கள் கைத்தாங்கலாக 

சபைக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

  #எதனையும்_கண்டு_கொள்ளாத_பிரதமர் 

 தான் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தனக்கு முன்பாக இவ்வளவு சம்பவங்கள் நடந்தபோதும் எதனையும் கண்டுகொள்ளாது பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரை  மகிந்த அணியினர் நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக ஐ.தே.க. எம்.பி.க்களில் ஒரு தரப்பினர் பிரதமரை சுற்றி அரண் அமைத்து பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருந்தனர். 

தலைமறைவான#கொரில்லாத்_தாக்குதல்

சபை ஒத்திவைக்கப்பட்ட போது மகிந்த அணி எம்.பி.க்களும் ஐ.தே.க. எம்.பி.க்களும் சபையிலேயே இருந்தனர். இந்நிலையில், அரச தரப்பு பக்கமாகவிருந்து சபை நடுவாக எதிர்க்கட்சிப் பக்கம் 

சென்ற மரிக்கார் எம்.பி. தன்னை கன்னத்தில் அறைந்த காமினி லொக்குகே அமர்ந்திருந்த இடத்துக்குப் பின்புறமாகச் பதுங்கிச் சென்று காமினி லொக்குகே மீது அதிரடித் தாக்குதலை நடத்தி விட்டு சபையிலிருந்து தப்பியோடினார். அவரை மகிந்த அணி எம்.பி.க்கள் சிலர் விரட்டிச் சென்றனர்.

பதுங்கி தாக்கிய பிரசன்ன ரணதுங்க

சபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மரிக்கார் எம்.பி. கெரில்லாத் தாக்குதலை ஆரம்பித்து வைக்கவே, மீண்டும் மோதல் ஆரம்பமானது. இதில் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதன்போது  எதிர்க்கட்சிப் பக்க பின் கதவு வழியாக பதுங்கி பதுங்கி வந்த பருத்த உடம்பைக் கொண்ட மகிந்த ஆதரவு எதிரணி எம்.பி.யான பிரசன்ன ரணதுங்க ஐ.தே.க. எம்.பி.யான. சமிந்த விஜேசிறியை பின்பக்கமாகத் தாக்கி விட்டு மிக வேகமாக  சபையை விட்டு தப்பியோடினார். இவ்வாறான தாக்குதல்களால் சபை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

இடையில் சென்று நசுங்கிய 

#பெண் எம்.பி.க்கள்

இரு தரப்பும் சரமாரித் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சண்டையை நிறுத்த முயன்ற ஐ.தே.க. பெண் எம்.பி.க்கள் இருவர் இரு தரப்பு மோதலுக்கிடையே சிக்குப்பட்டுக் கொண்டனர்.எம்.பி.க்களை இழுபறிப் பட்டுக் கொண்டு கால், கைகளாலும் கையில் கிடைத்த பொருட்களினாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள அதற்கு இடையில் இந்த பெண் எம்.பி.க்கள் சிக்குப்பட்டு நசுங்குண்டனர். அவர்கள் கதிரையில் மேசையில் விழுந்த போதும் சண்டையை நிறுத்த துணிச்சலுடன் போராடினர். 

#பறந்த_பைல்கள்_டயரிகள், #கிழிந்த_ஆடைகள்

கும்பல் கும்பலாக எம்.பி.க்கள் கடுமை யாக  மோதிக்கொண்டனர். இதன்போது மேசைகளில் கிடந்த பைல்கள் டயறிகள், புத்தகங்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். மகிந்த ஆதரவு அணி யின் சண்டித்தன எம்.பி.யான பிரசன்ன ரணவீர வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஐ.தே.க. எம்.பி.க்களை தாக்கச் சென்று வசமாக மாட்டிக் கொள்ளவே அவர் ஐ.தே.க. வினரால் நையப் புடைக்கப்பட்டார். அவரைப் போன்றே இன்னும் சிலரும் வசமாக வாங்கிக் கட்டினர். இதில் சிலர் சேட்டுகள், வேட்டிகள் கிழிந்த நிலையிலும் காணப்பட்டனர்.

#தற்பாதுகாப்பு_தேடிய_சம்பந்தன்

சபை ஒத்திவைக்கப்பட்ட முன்னரே இரு தரப்புக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு மோதல் வெடிக்கும் சூழல் காணப்பட்டதை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது முன் வரிசை ஆசனத்திலிருந்து மெதுவாக எழுந்து 3 ஆவது வரிசை ஆசனத்தில் சென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அவர் இருந்த இடத்திலேயே மோதல் வெடித்ததால் அவர் அங்கிருந்து மிகச் சிரமப்பட்டு ஒருவாறு சபையை விட்டு வெளியேறிச் சென்றார்

#துவம்சம்_செய்யப்பட்ட_தமிழ்க்_கூட்டமைப்பின்_இடம்

 இரண்டாம் கட்ட மோதல்கள்  அனைத்தும் தமிழ்த் தேசியக்கூ ட்டமைப்பினர் அமர்ந்திருக்கும் இடத்திலேயே இடம்பெற்றன. இதன்போது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட டயறிகள், புத்தகங்கள், தண்ணீர்போத்தல்கள் என அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடையதாகவே இருந்தன. மேசைகளில் இருந்த பல ஆவணங்களும் கிழித்து வீசப்பட்டன. 

சுமார் 20 நிமிடங்கள் வரை இம்மோதல்கள் இடம்பெற்று மோதல்கள் முடிந்த பின்னர் அலங்கோலமாக காணப்பட்ட கடையை சீர்படுத்தும் முயற்சியில் பாராளுமன்ற உதவியாளர்கள்ஈ டுபட்டனர். மோதலில் காயமடைந்த சில எம்.பி.க்கள் சிகிச்சை பெற்றனர். ஒரு சில எம்.பி.க்களுக்கு மர்ம ஸ்தானங்களில் தாக்கப்பட்டதாகவும் பின்னர் கூறப்பட்டது. 


Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018