செஞ்சுரியன் டெஸ்டில் வெற்றிக்காக இதை செய்வாரா கோலி!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு சில முக்கிய மாற்றங்கள் தேவை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் அவசியம் என்ற கருத்து அதிகளவில் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் சில..முதல் டெஸ்டில் இந்திய அணியின் துவக்க ஜோடியான முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் 16 மற்றும் 30 ரன்கள் என சொதப்பலான துவக்கம் அளித்தது. இதனால் துவக்க ஜோடியை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

துணிவு வேணாம்..

இதே போல துணைக்கேப்டன் ரகானேவுக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் ரோகித் சர்வை அணியில் சேர்த்த கோலியின் துணிவான முடிவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் தென் ஆப்ரிக்க ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அவசியமில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே இந்திய அணி, செஞ்சுரியனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெரும் என முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018