தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு மகிந்த மேற்கொண்ட சதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்வேறு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக போட்டியிடும் இ.கந்தசாமி, மற்றும் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் காரியாலயம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதற்காக பாரியளவு பணத்தையும் செலவு செய்து பார்த்தார். படுகொலைகளையும் செய்து பார்த்தார்.

ஆனால் கூட்டமைப்பை சிதைக்க முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியததை பேணுவதற்கு கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர்.நாட்டின் முக்கிய கட்சிகளை பிளவடையச் செய்தார்கள். அவர்களால் உடைக்க முடியாமல் இருக்கும் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.

கூட்டமைப்பு ஒருபோதும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் விலை போகாது. உண்மைக்காக, உரிமைக்காக, மக்களோடு மக்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கும்.

இந்நிலையில், அராஜகத்தனத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள், கூட்டமைப்பை கிழக்கு மாகாணத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் என எத்தனித்தார்கள்.கடந்த காலங்களில் ஒவ்வாரு கட்சிகளும் எமக்கு இழைத்த அநீதிகளை எமது மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் இழைத்த அநீதிகளுக்கு அவர்கள் இன்னும் பாவமன்னிப்புப் பெறவில்லை.

இவையனைத்தும், இந்த உலகத்தின் பார்வையில் செய்யப்பட்டதாகும். நீதிதேவதை இன்னும் கண்ணைத் திறக்கவிலலை, கண்ணைத் திறப்பதற்குபெரும் தேசியக் கட்சிகள் இன்னும் வாய்ப்புக் கொடுக்கவில்லை.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்பதற்கு யோக்கியமற்ற கட்சிகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018