லசந்தவை படுகொலை செய்வதற்கு ஆயுதம் இறக்குமதி செய்யப்பட்டது?

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.

ஆயுத இறக்குமதியின் ஊடாக இந்த ஆயுதம் இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கூரிய ஆயுதமொன்றின் மூலம் தாக்குதல் நடத்தி இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வாகனத்தின் சாரதி இருக்கைப் பகுதியின் கதவுக் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு லசந்தவை இந்த ஆயுதம் தாக்கியுள்ளது.

இந்த ஆயுதம், தன்னியக்க அடிப்படையில் இயங்கக்கூடிய விசேட வகையிலலான ஓர் ஆயுதம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான விசேட ஆயுதமொன்று இலங்கையின் பயங்கரவாத அமைப்புக்களிடம் இருக்கவில்லை என புலனாய்வுப் பிரிவு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சர்வதேச ரீதியில் ஒரு சிலரிடம் மட்டுமே இந்த வகை ஆயுதம் காணப்படுகின்றது.

இந்த ஆயுதம் இதற்கு முன்னதாக இலங்கையில் எந்தவொரு இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

எனவே லசந்தவை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் இந்த விசேட வகை ஆயுதமும் இறக்குமதி செய்யப்பட்டு தாக்குதலின் பின்னர் அழிக்கப்பட்டோ அல்லது புகைக்கப்பட்டோ இருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018