வைரமுத்துவை மிரட்டுவது அருவருக்கத்தக்கது; வரம்புமீறலுக்கு தமிழகத்தில் இடமில்லை: ஸ்டாலின் கண்டனம்!

ஆண்டாள் குறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தவறான கருத்து தெரிவித்தாக சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கவிஞர் வைரமுத்துவை கடுமையாக சாடினார். இது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது.

தனது கருத்துக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்பும் இந்து அமைப்புகள் அவர் மீது தொடர்ந்து மிரட்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும் வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது மிரட்டு வகையில் கருத்துக்கள் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெறுப்பு அரசியலுக்கு விதை தூவலாம் என சிலர் நினைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது என்றும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில்  சிலர் வைரமுத்துவை மிரட்டுவது கண்டனத்திற்குரியது. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்து தெரிவிக்கின்றனர். அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்று கருத்து மட்டுமே இருக்க முடியும்.

ஆண்டாள் பற்றி அறிஞரின் கருத்தை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியிருந்தார். ஆனால் வைரமுத்து பேச்சை எதிர்த்து எச்.ராஜா கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். வைரமுத்துவை மிரட்டுவது அருவருக்கத்தக்க செயல். இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018