சசிகலா அறையில் இருந்து ஜெயலலிதாவுக்கு எழுதிய குட்கா ஊழல் ரகசிய கடிதம் பறிமுதல்!!

குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசிய கடிதங்கள் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விஷயம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

குட்கா ஊழல் தொடர்பாக சேகரித்த விஷயங்களை ஆவணப்படுத்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போதைய போலீஸ் டிஜிபி மூலம் கடிதமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சசிகலாவின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை இந்த ஆவணங்களை எடுத்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் சூசை பாபு வர்கீஸ் அளித்த பேட்டியில், ‘’2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதி, அப்போதைய வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், அப்போதைய போலீஸ் டிஜிபியிடம் ஒரு ரகசிய கடிதம் கொடுத்து இருந்தார். கடிதத்தில் அந்த டிஜிபி கையெழுத்திட்டு, 2016, செப்டம்பர் 2ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார். 

கடந்தாண்டு நவம்பர் மாதம் போயஸ் இல்லத்தில் சோதனையிடப்பட்டது. அப்போது இந்த ரகசிய கடிதங்கள் சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ரகசிய கடிதத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், குட்கா நிறுவன பார்ட்னர் மாதவ ராவ் அளித்த வாக்குமூலம் என்று அனைத்து ரகசியங்களும், யார், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் அரசு அதிகாரிகள் யார் யாருக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களும் இருந்தன. சுருக்கமாக ஆங்கிலத்தில் ‘’HM’’ என்றும் ‘’CP’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. HM என்பது தமிழக சுகாதார துறை அமைச்சரையும், CP என்பது கமிஷனர் ஆப் போலீஸ் என்பதையும் குறிப்பதாக தெரிய வந்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2016ல், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஜீன் 15 ஆம் தேதி வரைக்கும் ரூ. 56 லட்சம் வழங்கி இருப்பதாக மாதவ ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கடிதம் அப்போதைய தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

திமுக எம்.எல்.ஏ., அன்பழகன் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக இந்த பதிலை இன்று வர்கீஸ் தாக்கல் செய்துள்ளார்.

இந்தக் கடிதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதா? எதற்கு சசிகலாவின் அறைக்கு சென்றது போன்ற பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சசிகலாவின் தலையீடு அரசில் மறைமுகமாக அப்போதே இருந்ததா போன்ற ஐயங்களையும் எழுப்பியுள்ளது.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018