கட்சி, அரசியல் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு சசிகலா அதிகாரம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை  சந்திக்க, சுயேச்சை எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் நேற்று வந்தார்.

அவருடன்  பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரங்கசாமி மற்றும் நடிகை சரஸ்வதி, தினகரன்  ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் சென்று சசிகலாவை சந்தித்தனர்.

ஒவ்வொருவராக அழைத்து பேசினார்.அப்போது தினகரன் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு சிறைக்கு வெளியே டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

புது வருடத்தில் முதன் முறையாக பொதுச்செயலாளர் சசிகலா  மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினேன். சசிகலா டிசம்பரில் தொடர்ந்த மவுன விரதம் இன்னும் நீடித்து வருகிறது.  ஜனவரி 31ம் தேதி வரை இந்த மவுன விரதம் நீடிக்கும். முதலாவதாக குடும்ப விஷயம்  பற்றி பேசினோம்.

வெற்றிவேலை சந்தித்து பேசும்போது,  ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டது தொடர்பாக சசிகலா எந்தவிதமான  கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. புன்சிரிப்புடன் வரவேற்று பேசினார். வீடியோவை வெளியிட்டது பற்றி அவர் எந்தவித கருத்தும் கூறவில்லை. 

இக்கட்டான நேரங்களில் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை தன்னிடம் கேட்காமல், என்னையே தீர்மானிக்கும்படி அறிவுறுத்தினார்.  திட்டமிட்டபடி தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க. தான் எங்கள் கட்சி. 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான  வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறேன். இந்த தீர்ப்பு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்துவோம்.

ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருக்கும் நிலையில்  மேலும் 5 பேர் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர். இது தவிர ‘ஸ்லீப்பர்  செல்களும் இருக்கின்றனர். இரண்டொரு மாதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்  ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
யாழ். காரைநகர்
லண்டன்
20 சனவரி 2018
Pub.Date: January 23, 2018
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018