தை பிறந்தால் வழி பிறக்கும் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவை மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்கா ஸ்டாலின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொங்கலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த விழா நடைபெறும் நாள், தேதி குறித்து விழா ஏற்பாட்டாளர்களை விட எனக்கு அதிக ஆர்வம் ஏற்படும். 

ஏனென்றால் இதுபோன்று கலைநிகழ்ச்சிகளோடு இந்த பொங்கல் விழா நடைபெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. விழா நடைபெறும் இந்த ஆதனூர் பகுதிக்கு திமுக எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை இப்பகுதி பொதுமக்கள் நன்கு அறிவர்.

கடந்த 1990ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக இப்பகுதியில் 39 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 442 தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாதம் ரூபாய் 502 வீதம் 10 ஆண்டுகளுக்கு செலுத்தி வீடு இப்போது தொழிலாளர்களுக்கு சொந்தமாகி உள்ளது. தற்போது அதன் மதிப்பு 50 லட்சம் ஆகும். 

ஆனால் தற்போதைய ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லாத அரசாக இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களின் ஒரே கவலை ஆட்சியை தக்கவைப்பது மட்டுமே. அதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களையே 18 பேரை நீக்கினார்கள். மேலும் சதித்திட்டம் மூலம் நம்முடைய 21 எம்எல்ஏக்களை நீக்க திட்டமிட்டார்கள். ஆனால் சரியான நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியதன் மூலம் அந்த சதியை முறியடித்தோம். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. விரைவில் நமக்கு சாதமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, நீதிமன்றம் மூலம் இந்த ஆட்சி அகற்றப்படும். 

விமானத்தில் சென்றாலும், ரயிலில் சென்றாலும், நடைபயிற்சியின்போதும், டீ குடிக்கச் சென்றாலும், உணவருந்தச் சென்றாலும் பார்க்கும் அனைவரும் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். அதேபோன்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க சட்டம் இயற்றப்படும். அணைவருக்கும் தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். 

விழாவுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.  வீரவாள் பரிசளிப்பு: மு.க.ஸ்டானுக்கு ஆதனூர் ஊராட்சி கழக செயலாளர் தமிழ்அமுதன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்விழி தமிழமுதன் வெள்ளி வீரவாளை நினைவுப் பரிசாக வழங்கினர்.

Ninaivil

திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
யாழ். காரைநகர்
லண்டன்
20 சனவரி 2018
Pub.Date: January 23, 2018
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018