திருநாவுக்கரசரை மாற்றுவது உறுதி; தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் : ஈவிகேஎஸ்.இளங்கோவன்

திருநாவுக்கரசரை மாற்றுவது உறுதியாகிவிட்டதால் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். மத்திய சென்னை மாவட்ட அண்ணா நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா செனாய் நகரில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பின் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய தலைவரை மாற்றுவது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே தைரியமாக இருங்கள். 

உழைப்புக்கு எப்போதும் மரியாதை உண்டு. புதிய தலைவர் யார் என்பதை ராகுல்காந்திதான் முடிவு செய்வார். அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்ததும் மாநில தலைவர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.

தலைவர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை எல்லாம் சொல்ல முடியாது. அது எனக்கு தெரியவும் தெரியாது. தற்போதைய சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் கட்சி பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை. எனவே, புதிய தலைமை என்பதை நல்லது என்றே நினைக்கிறேன் என்றார். 

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018