பிரதமரின் ஊழலை நிரூபித்தால் முதலில் நான் சகல பதவிகளையும் துறப்பேன்- தலதா

பிரதமர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக நிரூபித்தால் முதலில் தான் பதவி விலகுவதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடியதாகவோ ஊழல் செய்ததாகவோ உறுதி செய்யப்பட்டால் என்னுடைய இரண்டு அமைச்சுப் பதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அனைத்தையும் விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

காக்காவத்தை, மாதம்பை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திருட்டுப் புத்தி உள்ளவர்கள் தான் பதவிக்கு வர முயற்சிக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை திருடனாக ஊடகங்களில் சித்தரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.

அன்று பிரதமர் ஊழல் செய்தமையை முடியுமானால் உறுதி செய்யட்டும். தலதா அத்துகோரள நீதிபதிகளின் விடயங்களில் தலையிடுவதாக சொல்வதாக கேள்விப்பட்டேன். பகுத்தறிவில்லாத ஜென்மங்களே அவ்வாறு சொல்கிறார்கள்.

ஆனால் நீதிபதிகளின் தீர்ப்புக்களில் தலையிட்டவர்கள் யாரென்தை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.  தங்களுக்கு பொருத்தமில்லாத தீர்ப்பினை வழங்கவில்லை என்பதற்காக நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பி பழிதீர்த்தவர்கள் யார் என்பது இந்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018