ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவரது நல்ல எண்ணம், வெகுளித்தனம், அமைதி, காதல், உண்மை குணம் போன்றவற்றின் காரணமாக தமிழக மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.

தனக்கென்று ஓவியா ஆர்மி, ஓவியா ஸ்வீட்ஸ் ஆகிய ஹேஷ்டேக்குகள் உருவாக காரணமாக இருந்துள்ளார். மேலும், எப்போதும் டுவிட்டரில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது, அந்த வீட்டு பச்சிளம் குழந்தையை தூக்கி கொஞ்சும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் சென்ற போது, அவரிடம் கொஞ்சம் கூட பந்தாவே இல்லையாம்.

ஒரு சாதாரண மக்கள் எப்படியிருப்பார்களோ, அப்படியே வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நாளை காலை 9 மணிக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடுகிறார் என்பது குறிப்பித்தக்கது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018