இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. இந்நாட்டிலே சிங்களம் மட்டும் என்ற சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டதோ, அன்றே தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பின், அம்பாறை மாவட்டத்தின் பாலையடி வட்டாரத்திற்கான காரியாலயம், நேற்று(12.01.2018) மாலை நெல்லிக்காடு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வின்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கயிலே தமிழன் வாழ்கின்றான், அதுவும் உரிமையிழந்து வாழ்கின்றான். தமிழினம் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழினம் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டியது ஆயுதப் போராட்டம்தான் என்பதை யாவரும் அறிவோம். 2009 ஆம் ஆண்டு அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்கள் இன்றும் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருப்பது தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.

கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல வங்களை நாங்கள் கடந்த காலங்களில் இழந்நிருக்கின்றோம். இவ்வாறான வளங்களை எமக்குரிய நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைத்தவுடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் இலட்சக்கணக்காக இழந்த உயிர்களை, நாம் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே, தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. இந்நாட்டிலே சிங்களம் மட்டும் என்ற சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டதோ, அன்றே தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இதற்கான ஒரு அரசியல் தீர்வுக்காக பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என இரண்டு ஒப்பந்தங்களும் கிளித்தெறியப்பட்டன. இதன் காரணத்தினால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் இன்று நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம்.

இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாகவிருந்த பெரும்பான்மைக் கட்சிகளில்கூட, எமது தமிழ் மக்களில் சிலர் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றார்கள். தமிழன் ஒருவன் பெரும்பான்மைக் கட்சிகளுக்குத் துணைபோகின்றான். பெரும்பான்மைக் கட்சிக்கு வாக்குக் கேட்டு வருகின்றான் என்றால், அவருக்கு வெட்கமில்லையா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கக் கூடாது, பலவீனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறானவர்கள் பெரும்பான்மைக் கட்சிகளில் இறக்கி விடப்பட்டிருக்கின்றார்கள்.

இதுவரை காலமும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடாமல், சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள், பலர் இந்த தேர்தலில் தேசியக் கட்சிகளினூடாகவும், சுயேட்சைக் குழுக்களுடாகவும் இறக்கி விடப்பட்டிருக்கின்றாரகள்.

படகுச் சின்னத்தில் தேர்தல் கேட்டு வருபவர்களுக்கு, இந்தத் தேர்தலில் தோல்விப் பயம் பிடித்துள்ளது. இவ்வாறானவர்கள் போராட்டத்தைப் பற்றி அவர்கள் எமக்குச் சொல்லத்தர வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் 37 வருடகாலமாக நாங்கள் போராட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள்.

1983 ஆம் அண்டு போராட்டத்தில் இணைக்கப்பட்ட நாங்கள் வெடிப்பட்டு வடுக்களைச் சுமந்து நிற்கின்றோம். எனவே வேறு யாரும் இங்கு வந்து தமிழ் மக்களின் உரிமைகளைகப் பற்றிப் பேச வேண்டிய தேவை இல்லை என, அவர் தெரிவித்தார்.


Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018