கூட்டமைப்பைத் தவிர வாக்குக் கேட்பதற்கு எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை : ஞா.சிறிநேசன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை வேறு எந்தக்கட்சிக்கும் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற யோ.ரஜனி மற்றும் கயசீலன் ஆகியோரின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் பாலையடிவட்டை, கூழாவடியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்துவைக்கப்படட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது,  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உரையாற்றுகையில்,

‘உலகமே வியந்த விலைபோகாததும் மிகவும் கட்டுப்பாட்டுடனும் இருந்த விடுதலைப்போராட்டத்தினை பலவீனப்படுத்தியது யார்? இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து உங்களிடம் வாக்குகளை கேட்கமுடியும்.அநீயாயங்களை அக்கிரமங்களை செய்தவர்கள்,பெண்களின் தன்மானத்தோடு விளையாடியவர்கள், கொடுமைகளைச் செய்தவர்கள் கூட தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டுவருகின்றனர்.

கொலைகள் விழுந்தாலும் கூட கொள்கையில் இருந்து மாறாமல்செல்லும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. கொள்கையில் இல்லாமல் போராட்டத்திற்கு சென்று அதனை மெலினப்படுத்தியவர்கள், போராட்டத்தின் பலத்தினை இழக்க செய்தவர்கள், எங்களுக்கு எதிரானவர்களிடம் சரணாகதியடைந்து எங்களை அவர்களிடம் காட்டிக்கொடுத்தவர்கள், இவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பதை தமிழர்கள் செய்யமாட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்மைப்பைத் தவிர வாக்கு கேட்பதற்கு வேறு எந்தக்கட்சிக்கும் அருகதை கிடையாது’ என்றார்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018