பலியான மீனவரின் உடலை வாங்க மறுத்து இன்றும் போராட்டம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 2-வது நாளாக தொடர் தர்ணாப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். மத்திய அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கச்சிமடத்திற்கு நேரில் வந்து பாதுகாப்பான மீன்பிடிக்கு உத்தரவாதம் அளிக்கும் வரையிலும் போராட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே திங்கட்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ (21)என்ற மீனவர் உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் மீனவர் பிரிட்ஜோவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரது உடலை பெற்ரோர்களும், உறவினர்களும் வாங்க மறுத்து விட்டனர். மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை தங்கச்சிமடத்தில் துவங்கியப் மீனவர்களின் தொடர் தர்ணாப் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இலங்கை அரசை திருப்பி அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து வியாழக்கிழமை தங்கச்சிமடத்தில் தொடர் தர்ணாப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த தொடர் தர்ணாப் போராட்டத்தில் குழந்தைகளும், பெண்களும் உள்பட ஆயிரக்கணக்கான மீனவர்களும், பொது மக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மார்ச் 11, 12 ஆகிய இரு தினங்கள் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோனியார் திருவிழா புறக்கணிப்பதாகவும், மத்திய அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கச்சிமடத்திற்கு நேரில் வந்து பாதுகாப்பான மீன்பிடிக்கு உத்திரவாதம் அளிக்கும் வரையிலும் போராட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

மீனவர்களின் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக தலைவர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ராமநாதபுரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, திமுக துணைச் செயலாளர் ஐ. பெரியசாமி, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மாதவன், நடிகர் கருணாஸ், இயக்குநர் கௌதம், உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

மீனவர் படுகொலையை தொடர்ந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்களின் அடுத்தகட்டப் போராட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்ய வியாழக்கிழமை நாகப்பட்டிணத்தில் 6 மாவட்ட மீனவர்களின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018