யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு, யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை!

இனத்தின் அடையாளங்களுக்காக பலர் உயிர் நீத்துள்ள இந்த மண்ணில் தற்போது அடையாளங்களை அடகு வைக்கின்ற பண்பாடு எமது சமுதாயத்தில் உருவாகியுள்ளது என தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை அதை அறிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரேஷ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று தொல்லியல் ஆய்வு வட்டத்தலைவர் கந்தசாமி கிரிகரன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நூல்களின் அறிமுக உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது வரலாற்றை நூல்களாக பலர் எழுதியுள்ளார்கள். சிலர் பலர் இலங்கை தமிழர் வரலாற்றை எழுதிவிட்டு இலங்கைக்கு வராமலும் இருந்து விடுகிறார்கள். எழுதப்படும் ஒவ்வொரு வரலாற்றையும் பின்னால் வருபவர்கள் குறை கூறுவது வழமை. பொதுவாக வரலாற்று நூல்கள் முற்றுப்பெறுவதில்லை.

இன்றைய காலத்தில் உள்ளவர்கள், வரலாற்று இடங்களை தெரியாமல், கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். கொழும்பில் வெளிநாடுகளில் உள்ள வரலாற்று இடங்கள் தெரிந்திருப்பார்கள். ஆனால் தமது ஊரில் உள்ள வரலாற்று இடங்களை தெரியாமல் இருப்பார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு, யாழ்ப்பாண வரலாறு தெரிவதில்லை அதை அறிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை. ஆர்வமாக இருப்பவர்கள் மிக குறைவாகவே உள்ளார்கள்.

பேராசிரியர் புஸ்பரட்ணம், எழுதியுள்ள நூலானது, இலங்கை தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்களுடன், இலங்கைத் தமிழர்களுடைய ஆதிவரலாறுகள், தான் பயன்படுத்திய உசாத்துணை நூல்களை தெரிவித்து, மிகவும் ஒழுங்காக எழுதியுள்ளார்.

முன்னைய வரலாற்று பதிவாளர்களின் பதிவுகளை படிக்கும் போது, சந்தேகம் வரும். முன்னார் இருந்த தமிழ் வேந்தர்களை வீரர்களாக எழுதி பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தை அடக்கி வைப்பார்கள். ஆனால் வரலாற்று பேராசிரியர்கள் சத்தியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வரலாற்றாளன் உள்ளதை உள்ளவாறு எழுத வேண்டிய கடமை உள்ளது.

எமது மாவட்டத்தில் அருங்காட்சியகங்கள் சீராக பேணப்படவில்லை. நாவலர் பிறந்த வளவில் அருங்காட்சியம் என வைத்துள்ளார்கள் போருக்கு பின்னர் அங்குள்ள அருங்காட்சியத்தில் உள்ள பொருட்கள் மிக மிக குறைவான அளவில் உள்ளது.

யாழ்ப்பாணத்தின் தொன்மைச் சின்னங்கள் போருக்கு பின்னால் பல பொருட்கள் காணாமல் போய்விட்டது. ஆனால் தென்னிலங்கையில் பல விடுதிகளில் யாழ்ப்பாண கதவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முறிகண்டியில் தென்னிலங்கையைச் சேர்ந்தவருடைய கடையில், யாழ்ப்பாண பாரம்பரிய கதவு, சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

எமது பாரம்பரியம் எல்லாம் பறி போயுள்ள நிலையில், மிகுதியாக இருப்பவற்றை பாதுகாக்கும் முயற்சியில் ஒன்று, இவ்வாறான வரலாற்று பதிவுகளை ஆவணப்படுத்தி எழுதுவது தான்.

எத்தனையோ போர் தமிழுக்காக மொழிக்காக உரிமைக்காக இனத்தின் அடையாளங்களுக்காக உயிர் நீத்துள்ள இந்த மண்ணில் கூட, அடையாளங்களை நாங்களாகவே அடகுவைக்கின்ற பண்பாடு எமது சமுதாயத்தில் இப்போது உள்ளது.

வரலாற்று ஆவணங்கள் அடையாளங்களை பேணுவதற்கு பல்வேறு விடயங்கள், நூல் வடிவம் பெறவேண்டும். யாழ். பல்கலையில், தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அது நல்ல முயற்சி மிக விரைவில் அந்த விடயம் செயற்படுத்தப்பட வேண்டும் என, மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018