விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மையல்ல ; கருணா

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.

இதில்  கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன், தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது உண்மை எனவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் நான் காட்டிக் கொடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தான் தான் உருவாக்கியதாக தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக இயங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக தான் இருந்தாலும் தேசியக் கட்சியில் தான் ஒருபோதும் தேர்தல் கேட்டு வரவில்லை, என தெரிவித்த விநாயகமூரத்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழனை முதலமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திமிரை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018