காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு இன்று!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தாம் ஆரம்பித்த போராட்டங்கள் ஒரு வருடங்களை எட்டியுள்ள நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இது வரையில் எந்த தீர்வையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 334 வது நாளாக தொடரும் நிலையில், தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யக்கோரி கடந்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்த சாகும்வரை உண்ணவுத் தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று இன்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் நடைபெறும் கொட்டகை முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் ‘தமிழரின் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் உலகமே உருக வைத்த நாள் ஒரு வருடம் நிறைவு, ஸ்ரீலங்காவினால் தமிழர்களுக்கு தீர்வைத்தர முடியாது என்பதை உலகுக்கு உணர்த்திய நாள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை  தாங்கி நின்றனர். 

காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை நம்பி ஏமார்ந்தமை போதும் எனக்கூறிய அந்த சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, சர்வதேசத்தில் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தான் தமக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என கோரியுள்ளார்

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019