நித்தி கும்பல் வாயைத்திறந்தால் கூவம் போல் நாற்றமெடுக்கிறது - விளாசும் திருமா.!

ஸ்ரீவில்லிப்புத்தூரில், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒருங்கிணைத்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் ஆழ்வாளர்களுள் ஒருவராக கருதப்படுகிற ஆண்டாள் குறித்து சில கருத்துக்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த பேச்சிற்கு தமிழகத்தின் இந்துத்துவ அமைப்புக்கள் மற்றும் பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டுமெனவும்  தெரிவித்து அவர்கள் போராட்டங்களையும் பாஜகவினர் நடத்திவருகின்றனர்.

அதேசமயம், கவிஞர் வைரமுத்து தாம் ஆண்டாளை பெருமைப் படுத்திடவே நினைத்ததாகவும், சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காய் இப்பிரச்சனையை திசை திருப்பிட முயல்வதாகவும் விளக்கமளித்திருந்தார்.

ஆனால், வைரமுத்துவின் விளக்கங்களை காதில் வாங்கிக்கொள்கிற நிலையில் அவரை எதிர்ப்பவர்கள் இல்லை என்பதனை அவரை வசை பாடி வைரமுத்து எதிர்ப்பாளர்கள் வெளியிட்டுவரக்கூடிய காணொளி காட்சிகளின் வழியே நாம் அறிந்துகொள்ளலாம்.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வினை எதிர்த்து விசிக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமா, "ஆண்டாள் குறித்த தமது கருத்துக்கு வைரமுத்து போதிய விளக்கம் அளித்திருந்த போதிலும், அவரை இழிவுபடுத்தி பேசுகிறவர்கள் மத கலவரத்தினை இங்கே மூட்ட நினைக்கிறார்கள். சிறு பிள்ளைகளை வைரமுத்துவுக்கு எதிராக பேச வைக்கிற நித்தி கும்பல்கள் வாயைத் திறந்தாலே நாற்றமெடுக்கிறது. இவர்களின் கொட்டத்தை அடக்கவிட வேண்டும்" என பேசினார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018