தமிழக மீனர் படுகொலை: இந்திய கடலோர காவல்படை விசாரணை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் பிரட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இந்திய கடலோர காவல் படை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் மனோகர் பாரிக்கரை, அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா புதன்கிழமை சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர் "இந்திய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மீனவர் பிரட்ஜோவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும் மீனவர் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று அமைச்சரை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், "இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தூதரக அளவில் இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்திய அளவில் சம்பவத்தின் உண்மை நிலையை அறிய இந்திய கடலோர காவல் படை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறினார். இத்தகவலை பாதுகாப்புத் துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.

இந்நிலையில், மனோகர் பாரிக்கரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா பேசுகையில், "கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்திய மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது. இந்தியாவும் இலங்கையும் நடுக்கடலில் சர்வதேசக் கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்டால் அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தன. அதை மீறும் வகையில் இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர் பிரட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரர் யார் என்பதை அடையாளம் கண்டு அவரை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். நீடித்து வரும் இதுபோன்ற தாக்குதல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்றார்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019