உத­யங்க வீர­துங்க விடு­விக்­கப்­பட்­டதை ஏற்றுக் கொண்ட வெளிவி­வ­கார அமைச்சு

ரஷ்யா மற்றும் உக்­ரே­னுக்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. இது­கு­றித்து வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ரஷ்யா மற்றும் உக்­ரே­னுக்­கான முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க, மிக் விமானக் கொள்­வ­னவு மற்றும் பண மோச­டி­யுடன் தொடர்­பு­டைய 7.833 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை கொண்ட பொது­மக்கள் நிதி மோசடி குறித்­தான விசா­ர­ணை­க­ளுக்­காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 20 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­தினால் வெளி­யி­டப்­பட்ட கைது செய்யும் உத்­த­ர­வி­லி­ருந்து தப்­பித்து வரு­கிறார். 

வீர­துங்க தொடர்பில் இலங்கை இன்­டர்­போ­லினால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட நீல அறிக்­கையின் அடிப்­ப­டையில், அவர் இருக்­கு­மி­டத்­தினை கண்­ட­றிந்து கொள்­வ­தற்­காக பரஸ்­பர சட்ட ஆத­ரவு ஊடாக ஒரு­சில நாடு­க­ளுடன் இலங்கை அதி­கா­ரிகள் பணி­யாற்றி வரு­கின்­றனர். 

ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு செல்ல முற்­பட்ட வேளையில், கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வைத்து அவர் இடை­ம­றிக்­கப்­பட்டார். இந்த கைது நட­வ­டிக்­கை­யா­னது, இன்­டர்­போ­லினால் வெளி­யி­டப்­பட்ட 'நீல அறிக்கை" இன் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

குற்­ற­வியல் விசா­ர­ணை­களில் தேடப்­படும் நப­ரான வீர­துங்க இருக்கும் இடத்­தினைக் கண்­ட­றி­வதே இந்த அறிக்­கையின் குறிக்­கோ­ளாக அமைந்­தி­ருந்­தது. இருந்­த­போ­திலும், ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லுள்ள சட்டம் மற்றும் இன்­டர்போல் மேலாண்மை செய்யும் 'நீல அறிக்கை" விதி­மு­றைகள் கார­ண­மாக, வீர­துங்­கவின் தொடர்ச்­சி­யான தடுத்து வைப்பு நிறுத்­தப்­பட்­ட­துடன், அதனைத் தொடர்ந்து அவர் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் அதி­கா­ரி­க­ளினால் விடு­தலை செய்­யப்­பட்டார். 

தற்­போது அவர் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் தங்­கி­யுள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லுள்ள பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­துடன், குறித்த விசா­ர­ணைகள் முடியும் வரை வீர­துங்க ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தை விட்டு வெளி­யே­று­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­டையே, இலங்­கையில் வீர­துங்­க­வுக்கு எதி­ரான மோச­டிகள் மற்றும் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்து வரும் நிதி குற்­ற­வியல் புல­னாய்வு பிரி­வா­னது இவ் வழக்கு குறித்து அபு­தா­பியில் உள்ள இன்­டர்­போ­லுடன் பணி­யாற்றி வரு­கி­றது. 

இவ் விடயம் தொடர்பில் அபு­தா­பியில் உள்ள இலங்கைத் தூத­ரகம் மற்றும் குடி­வ­ரவு விவ­கா­ரங்­களில் நிபு­ணத்­துவம் கொண்ட ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லுள்ள வழக்­க­றி­ஞர்கள் ஆகியோர் இலங்கை அர­சிற்கு ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­கின்­றனர்.

மேலும் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்­களம் மற்றும் நிதி குற்­ற­வியல் புல­னாய்வு பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகளைக் கொண்ட குழுவானது, வீரதுங்கவுக்கு எதிராகவுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர் மறுமொழிகளை அளிப்பதற்காக இலங்கைக்கு நாடுகடத்தும் குறிக்கோளுடன், ஐக்கிய அரபு இராச்சியத் திலுள்ள தொடர்புடைய அதிகாரி களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரு கிறது. 

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar