தென் ஆப்ரிக்காவின் பிங்க் ராசி: ஒரு நாள் போட்டியில் குவித்த வெற்றிகள்!

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, முதல் மூன்று ஒரு நாள் போட்டியிலும் வெற்றியை பதிவு செய்து முதல் முறையாக வரலாறு படைத்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது.

இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செயதது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் தவான் (109), கோலி (75), தோனி (42) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 290 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.

அப்போது அந்த அணி 7.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, தென் ஆப்ரிக்க அணிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் வெற்றி இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 25.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வழக்கத்திற்கு மாறாக பிங்க் நிற ஜெர்சியுடன் 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.

ஏனென்றால், சார்லோட்டே மக்சிகே ஜோகனஸ்பர்க் அகாடமி மருத்துவனையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தென் ஆப்ரிக்க வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்க் நிற ஜெர்சியுடன் விளையாடிய போதெல்லாம், தென் ஆப்ரிக்க அணி, வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்., அணி வெற்றி பெற்றது.

இதற்கு முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனும் வெற்றி பெற்றுள்ளது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018