சில தினங்­களில் பாரிய மாற்­றங்கள்;ஜனா­தி­பதி

வெளி­வந்­துள்ள  உள்­ளூ­ராட்­சி­மன்ற   தேர்தல் முடி­வு­களை அடுத்து ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  நேற்று அவ­ச­ர­மாக    சுதந்­திரக் கட்­சியின்  முக்­கிய அமைச்­சர்­களை சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன்   தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய  சில தினங்­களில் பாரிய மாற்­றங்­களை செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்றார்.

நேற்­றைய தினம் வெளி மாவட்­டங்­க­ளில் இருந்த சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  கொழும்­புக்கு வர­ழைத்த ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன    தேர்தல் முடி­வுகள்   மற்றும்  அதற்கு அடுத்­தக்­கட்ட நகர்­வுகள்   எதிர்­கால  திட்­டங்கள் குறித்து  விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

ஜனா­தி­ப­தியின்   இல்­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான   சுசில் பிரேம்­ஜ­யந்த  அனர பிரி­ய­தர்­ஷன யாப்பா  நிமால் சிறி­பால டி. சில்வா ஜோன் சென­வி­ரட்ன உள்­ளிட்ட பலரும்  கலந்­து­கொண்­டி­ருந்த நிலையில்  பல்­வேறு   வாதப்­பி­ர­தி­வா­தங்கள்   இடம்­பெற்­ற­தா­கவும்  தெரி­விக்­கப்­பட்­டது. 

குறிப்­பாக  இதன்­போது உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய சில   நாட்­களில்  பாரிய மாற்­றங்­களை  மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுப்­ப­தாக   ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன     குறிப்­பிட்­ட­தாக  கூட்­டத்தில் கலந்­து­கொண்ட   அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த  தெரி­வித்­துள்ளார். 

இதன்­போது ஒரு சில எம்.பி.  சுதந்­திரக் கட்சி   தொடர்ந்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்­க­வேண்டும் என்று கூறி­ய­துடன்   மேலும் சில எம்.பி. க்கள்    சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவை  இணைத்­துக்­கொண்டு பய­ணிக்­க­வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்­ளனர்.    அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி    மஹிந்த ராஜ­ப­க்ஷவை   பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்டும் என்றும்    இந்தக் கூட்­டத்­தின்­போது  ஒரு சிலர் குறிப்­பிட்­டுள்­ளனர். 

எவ்­வா­றெ­னினும் தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய    சில தினங்­களில் பாரிய மாற்­றங்­களை செய்­வ­தற்­கான  நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுப்­ப­தற்கு  ஜனா­தி­பதி எதிர்­பார்ப்­ப­தாக    ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின்  பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர  குறிப்­பிட்­டுள்ளார். 

நடந்து முடிந்த  உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில்    முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான   சிறி­லங்கா பொது­ஜன பெர­முன    அமோக வெற்­றி­யீட்­டி­ய­துடன்    ஐக்­கிய தேசிய கட்­சியும்     சிறி­லங்கா சுதந்திரக் கட்சியும்   தோல்வியை சந்தித்துள்ளன. 

சுதந்திரக் கட்சியானது நடந்து முடிந்த  உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கடும்   தோல்வியை  சந்தித்துள்ளதையடுத்தே  நேற்று ஜனாதிபதி   அவசரமாக    சுதந்திரக் கட்சி அமைச்சர்களை சந்தித்து  கலந்துரையாடியுள்ளார். 

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019