மஹிந்த அணி அமோக வெற்றி : தேர்தல் குறித்து ஒரு பார்வை !

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் நேற்று இர­வு­வரை வெளி­யான முடி­வு­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன  மொத்­த­மாக 4621652 வாக்­கு­களை பெற்று  225 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி  அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும்     ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 3210 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.  அதா­வது நேற்று இரவுவரை வெளியான  முடிவுகள் பிரகாரம் 45.01   வீத­மான வாக்­கு­களை    இக்­கட்சி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. 
அத்­துடன் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க  தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியும் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன   தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்  கட்­சியும் இந்த  தேர்­தலில்  தோல்­வியை சந்­தித்­துள்­ளன. ஐக்­கிய தேசிய கட்சி   நாடு முழு­வதும் மொத்­த­மாக 3086124 வாக்­கு­களை பெற்று


41 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை  கைப்­பற்­றி­யுள்­ள­துடன்  2061 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும்  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து  மொத்­த­மாக    1280000    வாக்­கு­களை பெற்று 10 சபை­களை  கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 892  உறுப்­பி­னர்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.   


இதே­வேளை வடக்கு கிழக்கில்   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 262151 வாக்­கு­களை பெற்று 30  சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன்    309 உறுப்­பி­னர்­களை   பெற்­றுள்­ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி     இரண்டு சபை­களை  கைப்­பற்­றி­யுள்­ள­துடன்  ஒரு சபையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது.  மலை­ய­கத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து  சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை  தொழி­லாளர் காங்­கிரஸ் பல சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன்   தமிழ்   முற்­போக்கு கூட்­டணி  மூன்று சபை­களை  ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து கைப்­பற்­றி­யுள்­ளது. 


கட்­சிகள் நாட­ளா­விய ரீதியில் பெற்­றுக்­கொண்­டுள்ள  உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின்  அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது   சிறி­லங்கா பொது­ஜன பெர­முன  முத­லா­வது இடத்­தையும் ஐக்­கிய தேசிய கட்சி  இரண்டாம்  இடத்­தையும்  இலங்கை  தமி­ழ­ரசுக் கட்சி  மூன்றாம் இடத்­தையும்    ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நான்காம்   இடத்­தையும் பெற்­றுள்­ளன.     மக்கள் விடு­தலை முன்­னணி    எந்த சபை­யையும் கைப்­பற்­றா­வி்­டினும்  ஐந்­தா­வது  இடத்தை பெற்­றுள்­ளது. 


இரண்டு வருட தாமத்தின் பின்னர்  நேற்று முன்­தினம் நடை­பெற்ற உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்­தலின் பிர­சாரக் காலத்­தின்­போது  மும்­முனைப் போட்­டிக்­களம் நில­வி­யது.  அதா­வது ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும்      சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கும்  இடையில் இந்த மும்­முனை போட்டி நில­வி­யது.  


சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 


எவ்­வா­றெ­னினும்     தேர்­தலில்  முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கள­மி­றங்­கிய  சிறி­லங்கா பொது­ஜன பெர­முன    அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.  வடக்கு  கிழக்கு தவிர்ந்த அனைத்து  மாவட்­டங்­க­ளிலும்   அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில்   சிறி­லங்கா  பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. 


முன்னாள் ஜனா­தி­பதி   மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான   சிறி­லங்கா பொது­ஜன பெர­முன     மொத்­த­மாக 4367679  வாக்­கு­களை பெற்று   277  உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி  அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.    அத்­துடன்   அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும்     சிறி­லங்கா பொது­ஜன பெர­முன  3015  உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.   குறிப்­பாக  தென்­னி­லங்­கையின்   பெரும்­பான்மை   மக்கள்  செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில்  மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான   சிறி­லங்கா பொது­ஜன பெர­முன  பாரிய வாக்­குகள்  வித்­தி­யா­சத்தில்  வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. 


விசே­ட­மாக  கடு­வலை  ஹோமா­கம போன்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன   பாரிய  வாக்கு வித்­தி­யா­சத்தில்  வெற்­றீ­யிட்­டி­யுள்­ளது. குறிப்­பாக  கம்­பஹா  மாவட்­டத்தின்  தொம்பே  பிர­தேச சபையில்    சிறி­லங்கா பொது­ஜன பெர­முன   55967 வாக்­கு­களை பெற்று  வெற்­றி­யீ­ட­டி­யுள்­ளது. 


அத்­துடன் மஹ­ர­கம  பிர­தேச சபையில்   சிறி்­லங்கா பொது­ஜன பெர­மு­னவின்   வேட்­பாளர் பட்­டியல்  நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து  அக்­கட்­சி­யா­னது சுயேச்­சைக்­குழு  2  க்கு  ஆத­ர­வ­ளித்­த­துடன் அந்தக் குழு­வா­னது 44783  வாக்­கு­களை பெற்று  அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன்  மாத்­தறை  மாவட்­டத்தில்  சிறி­லங்கா பொது­ஜன பெர­முன  அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளது.  


ஐக்­கிய தேசிய கட்சி  


ஐக்­கிய தேசிய கட்சி   மொத்­த­மாக   3086124   வாக்­கு­களை பெற்று  41    உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை  கைப்­பற்­றி­யுள்­ளது.   ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது 2075 உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தென்­னி­லங்­கையில் அதி­க­மான உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம்   தோல்­வியை  தழு­வி­யுள்­ளது.   ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது வழ­மை­போன்று கொழும்பு  மாந­கர சபையில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.        


அத்­துடன் கண்டி மாத்­தளை  மாநக ர சபைகள் அம்­பாந்­தோட்டை நகர சபை வத்­தளை பிர­தேச சபை    நுவ­ரெ­லியா மாந­கர சபை  நாவ­லப்­பிட்டி அக்­கு­ரணை போன்ற  உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை     ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது.  அம்­பாறை  மாவட்­டத்­திலும்   ஐக்­கிய தேசிய கட்சி    சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து   பல  உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. 


ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை   சிறு­பான்மை  மக்கள் அதி­க­மாக வாழும்  பிர­தே­சங்­க­ளி­லேயே      வெற்­றி­யீட்­டி­யுள்­ள­துடன் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளது. 


இலங்கை தமி­ழ­ரசு கட்சி 


வழ­மைப்­போன்று வடக்கு கிழக்கில்   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  வெற்­றி­களை  பெற்­றுள்­ளது.   உதா­ர­ண­மாக  யாழ். மாவட்­டத்தில் யாழ். மாந­கர சபை உள்­ளிட்ட அதி­க­மான உள்­ளூ­ராட்சி சபை­களை  இலங்கை தமி­ழ­ரசு கட்­சியில் போட்­டி­யிட்ட    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றுக்­கொண்­டுள்­ளது.    சில  சபை­களில்   தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யா­வி­டினும்      சபை­களை வெற்­றிக்­கொண்­டுள்­ளது.  


எனினும்  சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யிட்ட    தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி    யாழ். மாவட்­டத்தில்  இரண்டு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் யாழ். மாந­க­ர­ச­பையில் எதிர்க்­கட்­சி­யா­கவும்   உரு­வெ­டுத்­துள்­ளது.  சாவ­கச்­சேரி மற்றும் பருத்­தித்­துறை   உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை     தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி    கைப்­பற்­றி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.   இதே­வேளை   ஈ.பி.டி.பி. கட்­சி­யா­னது   நெடுந்­தீவு மற்றும் ஊர்­கா­வற்­றுறை  உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. 


 எனினும்    தமிழர் விடு­தலை கூட்­ட­ணியில் போட்­டி­யிட்ட  சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்  அணி  ஒரு­சில உறுப்­பி­னர்­க­ளையே  யாழ்.  மாவட்­டத்தில் பெற்­றுள்­ளமை   இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.   அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில்  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை உள்­ளிட்ட  பல சபை­க­ளையும்  அம்­பாறை மாவட்­டத்தில் சில உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும்   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. 


மலை­யகம்  


மலை­ய­கத்தை பொறுத்­த­வரை  நுவ­ரெ­லியா  மாவட்­டத்தில்  சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் அதி­க­மான சபை­களை   கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் தமிழ்  முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து யானை சின்­னத்தில் போட்­டி­யிட்டு மூன்று சபை­களை  கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் பதுளை மாவட்­டத்தில்  வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்  வெற்­றி­பெற்­றுள்­ளது. 


ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தலை­மை­யி­லான   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி    பல சின்­னங்­களில் இம்­முறை போட்­டி­யிட்­டது.  எப்­ப­டி­யி­ருப்­பினும் சுதந்­திரக் கட்சி 10  சபை­களை வெற்­றி­கொண்­டுள்­ளது. இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும்    தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் ஊடாகவும் சுதந்திரக் கட்சியாகவும்  ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியாகவும் சில பிரதேசங்களில்   போட்டியிட்டது.   இதில்   இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ்  நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான சபைகளை பெற்றுள்ளது.   


அத்துடன்   குதிரை சின்னத்தில்  அக்கறைப்பற்று  மாநகர சபையில் போட்டியிட்ட   சுதந்திரக் கட்சி  அங்கு வெற்றியீட்டியுள்ளது.   அதேபோன்று   தென்னிலங்கையில் மிகவும் குறைவான    உறுப்பினர்களைளே  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  தலைமையிலான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி  பெற்றுள்ளன. 


மக்கள் விடுதலை முன்னணி 


இம்முறை  உள்ளூராட்சிமன்ற தேர்தலில்   மக்கள் விடுதலை முன்னணி  எந்த உள்ளூராட்சிமன்றத்தையும் கைப்பற்றவில்லை.  மாறாக குறிப்பிடத்தக்க அளவில்  ஆசனங்களை பெற்றுள்ளது.    கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற   தேர்தலில்  பெற்றதைவிட  வாக்குகளைவிட அதிக வாக்குகளை  மக்கள் விடுதலை முன்னணி   இந்தத்  தேர்தலில்  பெற்றுக்கொண்டுள்ளது. 

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019