வெள்ளை மாளிகையில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் பதவி ராஜினாமா

முன்னாள் மனைவியரை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து வெள்ளை மாளிகையில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.இதற்காக அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அலுவலகமான வெள்ளை மாளிகையில் ராப் போர்டர் என்பவர் செயலராக பணியாற்றி வந்தார்.

இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானவர். இவர் தங்களை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் தான் இவரை பிரிந்தோம் என்றும் இவரது இரண்டு முன்னாள் மனைவியரும் குற்றஞ்சாட்டினர்.

இது மிகப் பெரிய விமர்சனங்களுக்கு உள்ளானதால் சமீபத்தில் ராப் போர்டர் தன் வேலையை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அதிபர் டிரம்பின் உரைகளை தயார் செய்து தரும் வெள்ளை மாளிகை ஊழியர் டேவிட் சோரன்சென் தன் முன்னாள் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை சோரன்சென் மறுத்தார்.

ஆனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.இந்த இரண்டு அதிகாரிகளும் அடுத்தடுத்து பதவி விலகியது குறித்து அதிபர் டிரம்ப் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தன் 'டுவிட்டர்' பக்கத்தில் 'இந்த குற்றச் சாட்டுகள் இருவரது வாழ்க்கையில் பேரிடியாக விழுந்துள்ளன. அதில் சில உண்மையாகவும் சில பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் தவறான குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டவரின் வாழ்க்கை போனது போனது தான்' என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018