2 ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே அணி வெற்றி!

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே அணி வெற்றி பெற்றுள்ளது.


ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.


அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுள்ளது.


இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 30.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்று 154 ஓட்டங்களால் ஜிம்பாபே அணியிடம் தோல்வியடைந்துள்ளது. போட்டியில் ஜிம்பாபே அணி சார்பில் 121 பந்துகளில் 125 ஓட்டங்களை கூடுதலாக பெற்ற பிரண்டம் ரெய்லர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018