தேர்தல் முடிவுகள் இனவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக இந்த நாட்டின் இனவாதிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக அமைந்துள்ளது என நுவரெலியா மாநகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்றுள்ள கிருஸ்ணசுவாமி விவேகாநந்தன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் முடிவுகள் இனவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.


தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த அவர் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளின்படி அநேகமான சபைகளில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.


இந்த வெற்றிக்கு காரணம் எதுவாக இருக்கலாம் என சிந்தித்து பார்க்கின்ற பொழுது அது முழுமையாக இனவாத ரீதியாக போடப்பட்ட வாக்குகுளாகவே கருத வேண்டியுள்ளது.


அதற்கு காரணம் இந்த தேர்தலில் அவர்களுடைய கட்சியானது முழுக்க இனவாதத்தை கக்கினார்கள்.இந்த நாட்டை பிரிக்கப் போகின்றார்கள் என்று பொய்யான பிரசாரங்களை அவர்கள் செய்தார்கள்.தமிழர்களுக்கு நாட்டை கொடுக்க போகின்றார்கள் என்று கூறினார்கள் இதற்கு பயந்து போன சிங்களவர்கள் அந்த கட்சியை வெற்றி பெற செய்திருக்கின்றார்கள்.


அப்படியானால் திருடர்களை மீண்டும் ஆட்சியில் கொண்டு வந்து அமர்த்துவதற்கு இந் நாட்டு மக்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்களா? இந்த நாட்டில் இனவாதம் மீண்டும் தலை தூக்கினால் நாடு மிகவும் அதள பாதாளத்தை நோக்கி சென்றுவிடும்.எனவே இந்த நிலைப்பாடு மாற்றம் பெற வேண்டும்.இல்லாவிட்டால் எங்களுடைய அபிவிருத்தி சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் என்பன கேள்விக்குறியாகிவிடும்.


எனவே இந்த தேர்தல் இனவாதத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.இந்த தேர்தலின் மூலம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாரிய ஒரு பின்னடைவை சந்தித்திருக்கின்றது.


இது ஜனாதிபதிக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.எனவே இந்த கட்சியினர் இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இந்த நாட்டின் மிகவும் பழமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்சியாகும்.இதனை அவர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018