மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு விடுக்கப்பட்ட சிகப்பு எச்சரிக்கை

உள்ளுராட்சி சபைத் தேர்தலில்  மஹிந்த ராஜபக்ச  பெற்ற வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


2015ம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு விடுக்கப்பட்ட  சிகப்பு எச்சரிக்கை


இன்று காலை கொழும்பு இந்து கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 


மஹிந்த ராஜபக்சவின் வாக்குகள் மஹிந்த ஆதரவு வாக்குகள் என்பதைவிட இந்த அரசாங்கத்துக்கு எதிரான பெரும்பான்மை ஆட்சேபனை வாக்குகள் என்பதை இவர்கள் இருவரும் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் ஒரே நாட்டுக்குள் வாழும் தீர்மானத்துக்கு வந்துவிட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் மகிந்தவின் மீள்வருகையை கணக்கில் எடுக்க முன்வர வேண்டும்.


தமிழர்கள் விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் இதுதான் பெரும்பான்மை சிங்கள மக்களின் இன்றைய தீர்ப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.


இம்முறை மகிந்த அணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாமையோர் சிங்கள பெளத்த வாக்காளர்களே.


எனினும் 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை தமிழ் மக்களுக்கும் பின் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான வெற்றியாக எண்ணி செயற்பட்டு தமிழ் பேசும் மக்களை அந்நியப்படுத்திக்கொண்டதை போல் இந்த வெற்றியையும் சிங்கள பெளத்த எழுச்சி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணியினர் அர்த்தம் கொள்ள கூடாது.


தனது வெற்றியை இலங்கை தேசிய வெற்றியாக கருதி தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய கொள்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க வேண்டும் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018