வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள்; சிவாஜிலிங்கம் கடிதம்!

வடக்கு மற்றும் கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞா பனத்தில் வடக்கிழக்கில் 1000 விகாரகள் அமைக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது இன, மத துரோகங்களுக்கு வழி வகுக்கும் என்பதுடன் நல்லிணக்கத்தை பாதிக்கும் என கூறி மாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைக்குழு வுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.


இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஐ.தே.கட்சி உள்ளூட்சி சபை தேர்தலுக்கா ன விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 1000 வி காரைகளை கட்ட 500 மில்லியன் ரூபாய் ஒ துக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது உண்மையில் மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் பாரிய துரோகத்தை உருவாக்கும். அதேபோல் நல்லிணக்கத்தினையும் பாதிக்கும்.


எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர் ஒருவர் தேர்தல் காலத்தில் இந்து அமைப்பு க்கள் கண்டனம் என ஊடகங்களில் வெளி யான செய்தி தொடர்பாகவும், கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கட்சி ஒன்றுக்கு வாக்களிக்குமாறு கேட்கும் தோரணையில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாகவும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018