தமிழ் தேசிய விடுதலை தொடர்ந்து முன்னெடுப்பதற்காஆணையை தமிழ் மக்கள் தந்து உள்ளனர்! - செல்லையா இராசையா

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில்  10 ஆசனங்களை பெற்று மகத்தான சாதனையை நிலைநாட்டி உள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், தமிழர் விடுதலை கூட்டணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார

இவர் இது குறித்து நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்து உள்ளவை வருமாறு:

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் 06 ஆசனங்களையும்,  கல்முனை மாநகர சபையில் 03 ஆசனங்களையும்,  திருக்கோவில் பிரதேச சபையில் 01 ஆசனத்தையும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு வென்று உள்ளது. ஆனால் திருக்கோவில் பிரதேச சபையில் இன்னுமொரு ஆசனம் தேர்தல் சட்டப்படி எமக்கே உரித்தாதல் வேண்டும். அதை உரித்தாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.  

அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் அன்றி வடக்கு, கிழக்கு மாவட்டம் முழுவதிலும்  தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்புக்கு கணிசமான ஆதரவு கிடைத்து உள்ளது. நாம் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுப்பதற்கான ஆணையை எமது மக்கள் வ்ழங்கி உள்ளனர். அத்துடன் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க கூடிய மாற்று தலைமையாக தமிழ் தேசிய விடுதலை  கூட்டமைப்பை அடையாளம் கண்டு அங்கீகரித்து உள்ளனர்.

இத்தேர்தலில் எமக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன்  தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியல் பொறிமுறையை தொடர்ந்து இதய சுத்தியுடன் முன்னெடுப்போம் என்று இவ்விடத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018