குளிர்கால ஒலிம்பிக்: கனடாவுக்கு தங்கம்

குளிர்கால ஒலிம்பிக்கில் அணிகளுக்கு இடையிலான பிகர் ஸ்கேட்டிங்போட்டியில், கனடாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

தென் கொரியாவில் உள்ள பியோங்சங் நகரில், 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இதில் அணிகளுக்கு இடையிலான பிகர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் 8 வகையான போட்டிகள் நடத்தப்படும். நேற்று நடந்த ஐஸ் டான்ஸ் பிரிவில் அசத்திய கனடாவின் டெஸ்ஸா, மோய்ர் ஸ்காட் ஜோடி, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

எட்டு போட்டிகளின் முடிவில் 73 புள்ளிகள் பெற்ற கனடா அணி, முதலிடம் பிடித்து முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தவிர கடந்த 2014ல் ரஷ்யாவில் நடந்த 22வது குளிர்கால ஒலிம்பிக்கில், அணிகளுக்கான பிகர் ஸ்கேட்டிங் போட்டியில் கனடாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தது.

கடந்த முறை தங்கம் வென்றிருந்த ரஷ்ய அணி, 66 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இம்முறை ரஷ்ய அணி, ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடுகிறது. அமெரிக்க அணி (62 புள்ளி), மீண்டும் வெண்கலம் கைப்பற்றியது.

பெண்களுக்கான ஸ்னோபோர்டு போட்டிக்கான ஸ்லோப்ஸ்டைல் பிரிவில் அசத்திய அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன், 83 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர், கடந்த 2014ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், இப்பிரிவில் தங்கம் வென்றிருந்தார்

வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே கனடாவின் லாரீ புளோயின் (76.33 புள்ளி), பின்லாந்தின் எனி ருகாஜர்வி (75.38) கைப்பற்றினர்.

சுவிட்சர்லாந்து வெற்றி: பெண்களுக்கான ஐஸ் ஹாக்கி, பிபிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய சுவிட்சர்லாந்து அணி, 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சுவிட்சர்லாந்து அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக முதல் லீக் போட்டியில் கொரியாவை வீழ்த்தியிருந்தது.

ஜெர்மனி ஆதிக்கம்

பதக்கப்பட்டியலில் ஜெர்மனி அணி, 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்லகம் என, மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நான்கு இடங்களில் முறையே நெதர்லாந்து (3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), நார்வே (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), கனடா (2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்), அமெரிக்கா (2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) அணிகள் உள்ளன.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019