தமிழ் வண்டுகளும் முஸ்லீம் தேனீக்களும் மொட்டினை மொய்க்குமாம்; உதய கம்மன்பில

தமிழ் வண்டுகளும் முஸ்லீம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும் என நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுஜனபெரமுன கட்சி அடைந்த வெற்றியுடன் கொழும்பு அரசியல் தன் வலுச் சமநிலையை இழந்துள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நாலரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றை ஜனாதிபதி கலைக்க முடியாத நிலையில், 59 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கூட்டு எதிரணியினர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்கான பேரம்பேசல்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை் பலர் முதற்கட்டமாக எதிரணிக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆறுமுகம் தொண்டமானின் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளது. பிரதான முஸ்லீம் கட்சியின் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளதாக முஸ்லீம் பிரமுகர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்கனவே மகிந்த அரசாங்கத்தில் இருந்தது என்ற அடிப்படையிலும், கட்சியின் செயலர் டக்ளஸ்தேவானந்தாவின் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையிலும் அவருக்கும் மகிந்த அழைப்பு விடுக்கலாம். இத்தகைய நிலை உருவாகினால் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொட்டுடன் நெருக்கமாகலாம்.

ஆயின் ஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தனது பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும் போது பெரும்பான்மையை நிருபிக்கும் மகிந்த அணியில் இருந்து ஒருவர் பிரதமர் ஆக முடியும்.

அவ்வாறு மகிந்த பிரதமர் ஆகும் பட்சத்தில் ஜனாதிபதியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவி நீக்க முடியும்.

ரஸ்யாவில் சட்டம் இடம்கொடுக்காத போது புட்டின் தனது நம்பிக்கைக்கு உரியவரை ஜனாதிபதியாக்கி தனி அதிகாரத்தை தன்வசமாக்கியதற்கு நிகரான நிகழ்வுகள் இலங்கையிலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019