சர்வதேச விண்வெளி ஆய்வகம் தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு

பூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. அங்கு பணியில் ஈடுபட வெளிநாட்டு விண்வெளி வீரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இருந்தபோது கடந்த 2001-ம் ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆய்வகத்துக்காக அமெரிக்கா இதுவரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் செலவழித்து உள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 2018-2019-ம் ஆண்டில் செலவிட ரூ.975 கோடியை (150 மில்லியன் டாலர்) பட்ஜெட்டில் டிரம்ப் அரசு ஒதுக்கியுள்ளது. 2025-ம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வக பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

இதன்மூலம் விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அதற்கான பணியை வெள்ளை மாளிகை தொடங்கிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதனால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்குமா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018