தமிழர் எம்மீது வைத்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் : சம்பந்தன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சில இடங்களில் சிறிய பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கணிசமான மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,அந்த ஆதரவை நாம் முழுமனதுடன் ஏற்கின்றோம் என்றும் மக்கள் எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஓர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்றாலும் நாடாளுமன்றத் தேர்தலைப்போல கொள்கைகள் மற்றும் கட்சி என்பனவற்றைப் பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான இடங்களில் கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளது.சில இடங்களில் சிறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், ஒரு பெரிய பாதிப்பாக அவற்றை நான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை நாங்கள் பாதுகாப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018