யாருக்கு ஆதரவு : இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறது ஐ.ம.சு.கூ

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சபைகளில் தங்களின் ஆதரவை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானமோ எந்த தரப்புடன் இணக்கப்பாடோ ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் நாடு பூராகவும் 160ற்கும் மேற்பட்ட சபைகளில் எந்தக் கட்சிகளினாலும் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்படாதிருக்கின்றன.

குறிப்பாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் , ஐக்கிய தேசிய கட்சியும் குறித்த சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள போதும் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆசனங்களை பெற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவிலேயே குறித்த இரண்டு கட்சிகளும் தங்கியுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இது வரை எந்த தரப்பினருடனும் இந்த விடயம் குறித்த இணக்கப்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018