கனடாவில் ஐடி வேலை: தமிழகத்தில் இயற்கை விவசாயம்! அசத்தும் தமிழன்

தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த இளைஞர் கனடாவில் ஐடி துறையில் பணிபுரிந்து கொண்டே, தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

சதீஷ் கிருஷ்ணன் என்ற இளைஞர் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.

ஆனால் இவருக்கு விவசாயத்தின் மீது தீராத காதல் சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது.விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து இயற்கை விவசாயத்தை திறம்பட செய்து அதை செழிப்பாக்க வேண்டும் என்பது சதீஷின் கனவாகவே இருந்துள்ளது.

இதையடுத்து தான் சேமித்து வைத்த பணத்தை கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே 3 ஏக்கர் நிலத்தை இந்தாண்டு ஆடி மாதம் 21–ம் திகதி குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயத்தை சதீஷ் தொடங்கியுள்ளார்.

அவருக்கு மனைவி, நண்பர்களான ராம், எட்வர்ட் ஜோன்ஸ், வடிவழகன் ஆகியோர் உதவியாக உள்ளனர்.நிலத்தில் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா ஒரு ஏக்கரிலும், கிச்சிலி சம்பா ஒரு ஏக்கரிலும் சாகுபடி செய்து வரும் இவர்கள் மீதமுள்ள ஒரு ஏக்கரில் கடலை சாகுபடி செய்து எண்ணெய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த சில மாதங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து மீன் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, நாட்டு மாடு, ஆடு வளர்ப்பு மூலம் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையை பின்பற்ற உள்ளதாகவும் சதீஷ் கூறுகிறார்.இயற்கை விவசாயத்திற்காக ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன காங்கேயம் காளையை ஐம்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இவர்கள் வாங்கியுள்ளனர்.

தற்போதுள்ள ஐடி பணியே தன்னுடைய வாழ்வாதாரம் என கூறும் சதீஷ், விவசாயம் என்ற என கனவை எப்போது வாழ்வாதாரமாக மாற்றி அமைக்கிறேனோ, அப்போது இதையே முழு பணியாக செய்வேன் என கூறுகிறார்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019